மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி விஸ்னு கோயில் சந்திக்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவரில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

களுவாஞ்சிக்கூடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்