மட்டக்களப்பில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி

 

மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

எவர்கிறீன் விளையாட்டு கழகத்தினரால் இவ் விளையாட்டு போட்டியானது ஆண் பெண் இருபாலருக்குமான ஓட்டம்,கயிறு இழுத்தல்,சாயமுட்டி உடைத்தல்,சிறுவர்,இளைஞர் என இருபாலருக்குமான ஓட்டப் போட்டி என பல்வேறு விளையாட்டு நிகழ்சிகள் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்