பழைய மாணவர்களை ஒன்றிணைத்த கிரிக்கெட் போட்டி

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை – தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான மென்பெந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2017 O/L Batch அணியினர் வெற்றிபெற்று சம்பியன் மகுடத்தைச் சூடிக் கொண்டனர்.

2011 மற்றும் 2017 O/L Batch அணியினருக்கிடையில் இறுதிப் போட்டியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

சனி,ஞாயிறு தினங்களில் இப்போட்டிட் தொடர் இடம்பெற்றதோடு இதில் அல்ஹம்றாவின் O/L Batch பழைய மாணவர் அணியினர் 18 குழக்கள் பங்குபற்றியிருந்தனர்.

பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் இத்தோட்டி தொடரானது 2015 O/L Batch மாணவர்களினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் பங்குபெற்றிய இரண்டு அணிகளுக்கும் பண பரிசில்களும்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை. குறிப்பிடத்தக்கதாகும்.அத்தோடு போட்டி நாயகன் ,தொடராட்ட நாயகன்,போட்டின் 3 ஆம் இடத்திற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்