சவுதியில் மரணதண்டனையில் இருந்து தனிநபரை மீட்க 34 கோடியை திரண்டிய மக்கள் : நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியா கேரளா பகுதியில் இருந்து சவுதி அரபியாவிற்கு வேலைக்காக சென்ற நிலையில் சவுதி சிறையில் சுமார் 18 ஆண்டுகாலமாக அடைக்கபட்டு மரண தண்டனை விதிக்கபட்டுள்ள ஒருவரை மீட்க கேரளா மாநிலம் ஒன்றிணைந்து சுமார் 34 கோடி ரூபாய்யை திரட்டியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வேலைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடில் இருந்து சவுதி அராபியாவிற்கு சென்ற அப்துல் ரஹீம் என்பவர் கடந்த 2006 ஆண்டில் தவறுதலாக ஒரு சிறுவனின் மரணத்தை ஏற்படுத்திய காரணத்தினால் சிறுவனை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 18 ஆண்டுகளாக அப்துல் ரஹீம் சவுதியின் சிறையிலேயே இருந்த நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் அப்துல் ரஹீமின் பொது மன்னிப்பையும் ஏற்க மறுத்தனர். இதையடுத்து கடந்த 2018ல் அப்துல் ரஹீமிற்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு “Blood Money”, அதாவது இழப்பீடு தொகையை கொடுத்தால் மன்னிப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இந்த இழப்பீடு தொகையாக இந்திய மதிப்பில் ரூ.34 கோடி என அறிவித்து இந்த 34 கோடி ரூபாய்யை வருகின்ற 18 ஆம் திகதிக்குள் செலுத்தினால் மரண தண்டனையில் இருந்து விடுபடலாம் என தெரிவித்து தீர்ப்பளித்துள்ளது.

சவுதியில் சிக்கித்தவிக்கும் அப்துல் ரஹீமிற்காக ஒட்டுமொத்த மலையாள மக்களும் ஒன்றிணைந்து இந்த தொகைக்கு அவரவர் உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த தொகையை சேகரிக்க வெளிப்படைத் தன்மையுடன் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது .

இந்தநிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புவரை குறைவான நன்கொடையே இருந்து வந்தஎனினும், தற்போது உலகம் முழுவதிலிருந்தும் இந்த நன்கொடைக்கு பலர் தொகையை கொடுத்து அப்துல் ரஹீமிற்கு உதவி வருகிறார்கள்.

மரண தண்டனையில் இருந்து ஒரு நபரை காக்க ஒட்டுமொத்த உலகிலிருந்து பலரால் நன்கொடை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், நினைத்துப் பார்க்க முடியாத பெரிய தொகையை ஒரு மாநிலமே வழங்கியுள்ள இந்த சம்பவம பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்