கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி ஜன்னல் வழியாக கைகளை கழுவ முற்பட்ட போது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

தலையில் படுகாயமடைந்த குழந்தை முதலில் வெலிகனாடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கட்டுபாத்த பிரதேசத்தில் உள்ள உறவினர்களை சென்று பார்த்துவிட்டு குழந்தை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்