
மும்பையில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானச் சேவை
இந்தியாவின் மும்பையில் இருந்து கொழும்புக்கான நேரடி விமானச் சேவைகளை, இண்டிகோ விமானச் சேவைகள் நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, இண்டிகோவின் முதலாவது விமானம் இன்று முற்பகல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த விமானச் சேவைகள் மும்பையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மும்பைக்கும் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
