புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் கைது

-யாழ் நிருபர்-

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்று வியாழக்கிழமை இரவு 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ரத்னபுர, கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 13 பேரில் நான்கு பேர் மொரவெவ பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர்கள் எனவும் பெண்ணொருவர் அடங்குவதாகவும், வட்சப் ஊடாக புதையல் தொடர்பில் புகைப்படங்கள் பரிமாரப்பட்டமை தெரிய வந்துள்ளதாகவும் குறித்த வேனில் பயணித்தமை தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்