பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம்

தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனியவள விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் கபில நாவுதுன்ன இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்