தொடர்ந்தும் அதிகரிக்கும் முட்டையின் விலை

உள்ளூர் முட்டை விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளூர் முட்டையின் மொத்த விலை 50 ரூபாவாகவும், சில்லறை விலை 55 ரூபாவாகவும் உள்ளது.

இதேவேளை முட்டையின் விலை உயர்த்தப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து, முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்