
வங்கியில் பண மோசடி: பெண்ணுக்கு மரண தண்டனை
வங்கியில் பண மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட, வியட்நாம் நாட்டுப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில், இவர் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்தமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
67 வயதான ட்ரூங் மை லான் பணக்கார பெண் எனவும், சொத்து மேம்பாட்டு வணிகங்களை அவர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 11 ஆண்டுகளில் 44 பில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
வியட்நாமில் மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாக இது கருதப்பட்டது. உலகில் இதுவரை நடந்த மிகப்பெரிய வங்கி மோசடி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
