பொலிஸார் தாக்கியதில் தனது விதைப்பையை இழந்த இளைஞன்

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தனது மகனின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் ஒருவர் குற்றஞ்சாட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் வழங்கிய வாக்குமூலத்தின் படி, அனுராதபுரம் வைத்தியசாலை பொலிஸார் கெபிதிகொல்லேவ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் கெபிதிகொல்லேவ பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.

UPDATE

கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய சந்தேகநபர்களை ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சந்தேகநபர்கள் இருவரும் இன்று வியாழக்கிழமை கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்