விடுதியில் தங்கியிருந்த யுவதி மர்மமாக உயிரிழப்பு

அவிசாவளை பகுதியில் விடுதியில் தங்கியிருந்த யுவதி நேற்று புதன் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் விடுதிக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில்  மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் விடுதி நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்