
வன்முறை கும்பலின் அடாவடி
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் நொருக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் எரியூட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
