புகைப்பிடிப்பதை முறைத்து பார்த்தவரை அடித்து கொன்ற பெண்

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நாக்பூர் நகரில் உள்ள மனேவாடா சிமெண்ட் சாலையில் 24 வயது ஜெயஸ்ரீ பண்டாரே, கடையில் நின்று புகைபிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ரஞ்சித் ரத்தோட் (வயது – 28) என்ற நபர் குறித்த இளம் பெண் புகைப்பதை முறைத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீ அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயஸ்ரீ தன்னை திட்டுவதையும், புகைபிடித்து தன் பக்கம் புகைவிடுவதையும் தொலைபேசியில் படம்பிடித்த ரஞ்சித் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் ஜெயஸ்ரீ தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு ரஞ்சித் ரத்தோடையிடம் சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில் ஜெயஸ்ரீ கத்தியால் ரஞ்சித்தை மீண்டும் மீண்டும் குத்திக் கொன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் தப்பியோடிய ஜெயஸ்ரீ, சவிதா, ஆகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்