பாடசாலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சிறுவன் : பெற்றோருக்கு 15 வருட சிறைத்தண்டனை

கடந்த 2021 ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்களைக் கொன்ற சிறுவனின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை கலிபோர்னியா ஓக்லாண்ட் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஈதன் என்ற சிறுவனின் பெற்றோரான ஜேம்ஸ் மற்றும் ஜெனிஃபர் க்ரம்ப்ளே ஆகிய இருவருமே தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்கள் துப்பாக்கிச் சூடு நடந்த சில நாட்களுக்குப் பிறகு டெட்ராய்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டடு அன்றிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

15 வயதான ஈதன் க்ரம்ப்ளே கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து சிக் சாவர் 9 மில்லிமீற்றர் துப்பாக்கியைக் கொண்டு சென்று ஒக்ஸ்போர்ட் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

மரணத்தை ஏற்படுத்திய பயங்கரவாதம் நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் 19 தொடர்புடைய குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு ஈதனுக்கு கடந்த ஆண்டு பிணை இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈதன் க்ரம்ப்ளே (இடது) பெற்றோர் ஜேம்ஸ் மற்றும் ஜெனிஃபர் க்ரம்ப்ளே (புகைப்படம் : ராய்ட்டர்ஸ்)

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்