பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில்ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கைகயிலேயே தங்கியுள்ளது எனவும், இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்