லொத்தர் டிக்கட் மோசடி: ஆசிரியர் கைது

பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேசத்தில் பணம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தினம் தோறும் லொத்தர் சபையினால் சீட்டிழுக்கப்படும் டிக்கட்டுகளின் கடைசி இரண்டு எண்களை ஊகித்து மக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சோதனைக்கு உட்படுத்தி குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்