
மட்டக்களப்பில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த 54 வயதான ஒருவரே இந்த சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள், வெற்று உறுதிப்பத்திரங்கள், தட்டச்சு இயந்திரங்கள், என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
