தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – அருண் தம்பிமுத்து

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த மாநாடானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தலைமையில் இடம்பெற்றது.

புதிய தலைவராக அருன்மொழிவர்மன் தம்பிமுத்து மாநில மாநாட்டில் உறுதி செய்யப்பட்டார்.

செயலாளர் நாயகமாக வீ.ஆனந்தசங்கரி கட்சியின் புதிய மத்திய குழுவும் மாநாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய அ.தம்பிமுத்து,

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் அப்போது தான் தமிழ் மக்களுடைய ஆணை அதிகாரங்களை பாதுகாக்க முடியும் தமிழ் பிரதிநிதிகள் தலைவர்கள் அரசியலில் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்பதையே தமிழர் விடுதலை கூட்டணி விரும்புகின்றது, என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்