இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வருமானமின்மை, தொழில் இன்மை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்