மூதூர் -கட்டைபரிச்சான் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

-மூதூர் நிருபர்-

மூதூர் -கட்டைபரிச்சான் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இன்றைய தேர் திருவிழாவில் அதிகளவான  அடியார்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கலாச்சார நடனங்களும் இடம்பெற்றன.

இவ்வாலயத்தின் வருடாந்த மஹோட்சவம் கடந்த மாதத் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் திருவிழாக்கள் இடம்பெற்றன.

மூதூர் -கட்டைபரிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நாளை செவ்வாய்கிழமை தீர்தோற்சவத்துடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.