மட்டக்களப்பு வேத்துச்சேனை கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனிடம் எழுத்து மூலமாக தமது கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் அறிவித்திருந்தனர்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சிற்கு இது தொடர்பில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியில் இருந்து வேத்துச்சேனை கிராமம் வரை நீர் குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலனாதன் மதிமேனன், இலங்கை தமிழரசுக்கட்சி போரதீவுப்பற்று வட்டாரக்கிளை உபதலைவர், வட்டார இணைப்பாளர் மகேஸ்வரன் கோபிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாலையடிவட்டை இணைப்பாளர் தங்கராசா ஜெயசீலன், இலங்கை தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று வட்டார இணைப்பாளர் பெரிய தம்பி பிரதீப்குமார், இலங்கை தேசியநீர்வழங்கல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிர்மான பொறியியல் உதவியாளர் இளையதம்பி பிரதீபன், ஒப்பந்தகாரர் ஆஞ்சநேயர் நிறுவனத்தின் பிரதம பொறியிலாளர் ஆறுமுகம் வேணுராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.