
வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மரணம்
அனுராதபுரம் கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.
கெக்கிராவ, நெல்லியகம பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்த மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த மாணவன் பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது பாரவூர்தியில் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
