
-யாழ் நிருபர்-
ஒயில் ஏற்றிவந்த கனரக வாகன கொள்கலன் மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது.
இதனால் ஏ – 9 வீதியினூடான போக்குவரத்து காலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிவரை தடங்கல் ஏற்பட்டு தற்போது மாற்று வழியினூடான போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.
குடைசாய்ந்த கொள்கலனிலிருந்து ஓயில் வீதியியில் சிந்திக்கொண்டிருக்கிறது இந்நிலையில் கொள்கலனை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் கொடிகாமம் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.



