உடல் பருமனை குறைக்க சாப்பிடாமல் இருப்பது ஆபத்தில் முடியுமாம்

இன்றைய இளம் தலைமுறையினரிடையே உணவும் பழக்கம் என்பது சரியான முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனாலேயே உடல்பரும் அதிகமாகிவிட , ஜிம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர் பலர்.

அதேபோல சாப்பிடாமல் இருந்தால் உடல் பருமனை குறைத்துவிடலாம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடாமல் டயட்டில் இருப்பவர்களுக்கான பதிவுதான் இது.

அதாவது உடல் பருமனை குறைக்க பலர் தானாக சாப்பிடாமல் இருப்பது போன்ற செயல்களை செய்வதால் இதய நோய்களுக்கான ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக் கூறப்படுகின்றது.

உலகம் முழுவதிலும் துரித உணவு கலாச்சாரம், மாறி வரும் வாழ்க்கை நிலை காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் பிரச்சினை மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடல் பருமனை குறைக்க பலரும் பலவகையான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர்.

அப்படியாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டயட் முறைதான் இடைப்பட்ட உண்ணாவிரதம். அதாவது ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை சாப்பிடாமல் பட்டினியாக கிடந்துவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டுமே தினசரி சாப்பாடை சாப்பிடுவது.

இவ்வாறான டயட் முறையால் உடல் பருமன் குறைவதாக பலரும் சொல்வதால் இதை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில் இந்த டயட் முறை குறித்து ஆய்வு செய்த தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுபோன்ற இடைப்பட்ட உண்ணாவிரதம் முறையில் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 91 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்த டயட் முறையை மேற்கொள்பவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.