உலர்ந்த சோற்று உருண்டை உண்டவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

பதுளை மீகஹகிவுல பகுதியில் உணவு ஒவ்வாமையால் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 14, 34, 28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலர்ந்த சோறு, தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட அக்கல என்ற உணவை உட்கொண்ட நிலையில்இ பாதிக்கப்பட்ட அவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உணவை தேநீருடன் அருந்தியதன் காரணமாக அதிக வாந்தி ஏற்பட்டதால் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்