வலம்புரியை விற்க முயன்றவர் கைது

பேருவளை பகுதியில் அரியவகை வலம்புரியை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்ற போது ஒருவர் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மொரந்துடுவ, தெல்துவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேருவளை பிரதேசத்தில் உள்ள பிரபல தேவாலயத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்து வலம்புரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்