புதையல் தோண்டிய 6 பேர் கைது

நுவரெலியா ரதெல்ல பகுதியிலுள்ள காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 6 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்ற கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொத்துவில், நிட்டம்புவ, பிபில, குருணாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்