ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நுவரெலியா ஹங்வெல்ல – பாலகேவத்த பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.
ப்ரெண்டிகம்பல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மோசடி தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் வர்த்தகத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 3 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்