21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
-யாழ் நிருபர்-
எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்