மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் திடீர் சோதனை நடவடிக்கை

 

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுத்திய சுற்றி வளைப்பு பரிசோதனையின் ஒரு அங்கமாக தீடீர் பரிசோதனை நடவடிக்கைளை இன்று வியாழக்கிழமை முன்னெடுத்தனர்

இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட வாகனங்களை பரிசோதனை செய்யப்பட்டதுன்,  பயணிகள் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மோப்ப நாய்களுடன் பேருந்துகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது சோதனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிஸாரால் போதைப்பொருள் தடுப்பதற்கான  ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.