
-வெல்லாவெளி நிருபர்-
மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று, வீதியோரத்தில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பத்தில் பேந்தில் பயணித்தவர்களில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அங்கிருந்த பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், பட்டா ரக வாகனமும், பேருந்தின் முன்பகுதியும் பாரிய சேதம் அடைந்துள்ளன.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
