
அதிகூடிய வெப்பநிலை: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை மனித உடலால் உணரக்கூடிய, அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் தென், சபரகமுவ மாகாணங்களிலும்; அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக பொதுமக்கள் இடைக்கிடையே நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
