
-வெல்லாவெளி நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டிருந்தது.
5 காட்டுயானைகள் கூட்டமாக வெல்லாவெளிப் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளன.
இதனால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டிருந்தது. வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும் பெரும் பதட்டத்தின் மத்தியில் அவர்களது வேலைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் வெல்லாவெளியில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் யானை வெடிகளை கொழுத்தி அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டுப்பகுதிக்குள் யானைக் கூட்டத்தை துரத்தி சென்றனர்.
எனினும் அப்பகுதியில் மிக நீண்டகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசங்களும் தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
