இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல பிரதேசத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கடுவெல கொரதொட்டுவ பகுதியில் உள்ள ஹார்ட்வேர் கடைக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில்  வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளில் ஒருவர் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து, ஹார்ட்வேர் வளாகத்திற்குள் நுழைந்து, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையும், உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுவதையும் காட்டுகிறது.