பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கிற்கு வருகை தராதவர்களுக்கு பிடியாணை
கொம்மாதுறையில் மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இன்று திங்கட்கிழமை வருகை தராதவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கவன ஈர்ப்பு போராட்டம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவர், பொது அமைப்புகளை சேர்ந்த 37, பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏறாவூர் நீதிமன்றில் இன்று எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த வழக்கானது மீண்டும் இம்மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்