யோர்ச் அருளானந்தத்தின் “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்-

அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று முன் தினம்  சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக . தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர் கலந்து சிறப்பித்ததுடன் நூலின் முதல் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் சிறுகதை நூலானது இலவசமாகவே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்