மக்களின் பிரச்சினைகளை கவனிக்காது நடிகைகளை அழைத்து வந்து கூத்தும் கும்மாளமும் காட்டுகின்றனர்

-பதுளை நிருபர்-

டொலரின் பெறுமதி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாகவே தற்போதும் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சை தெரிவித்துள்ளார்.

பசறை ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

140-145 ரூபாய் வரையில் டொலரின் பெறுமதி காணப்பட்ட போது தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக காணப்பட்டது. ஆனால் தற்போது ஒரு டொலரின் பெறுமதி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாகவே தற்போதும் காணப்படுகின்றது. அத்துடன் வாழ்க்கை சுமை முன்று மடங்காக அல்ல நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

சில மலையக அமைச்சர்கள் மலையகத்தில் காணப்படும் சம்பள பிரச்சினையை விட்டுவிட்டு தான் ஒரு நடிகர் போல நடித்து கொண்டு மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அதே நடிப்பையே காட்டுகின்றனர் அத்துடன் கம்பனி காரர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இந்தியாவில் இருக்கும் நடிகைகளை கூட்டிக் கொண்டு வந்து கூத்தும் கும்மாளமும் காட்டுகின்றனர்.

ஆனால் மக்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. மலையக மக்கள் இவர்களை நம்பி வாக்குகளை அளித்து ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் தற்போது ஒரு சிலர் கூறுகின்றனர் 1700 ரூபாய் ஒரு நாள் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்று கொடுப்போம் என்று அதே 1700 ரூபாய் சம்பளம் 1 ஒரு நாள் வாழ்கை செலவுக்காக உங்களிடம் கொடுத்தால் உங்களால் வாழ முடியுமா?  ஏனென்றால் உங்களின் 1 நேர சாப்பாட்டுக்கு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றால் 20000 ரூபாய் தேவைப்படும் ஒரு தோட்ட தொழிலாளி 1700 ரூபாய் பணத்தில் எப்படி வாழ்வது அனைத்து உணவு பொருட்களின் விலையும் பல மடங்காக அதிகரித்து வரும் நிலையில் அவர்களால் வாழ்க்கை வாழ முடியுமா ” என லட்சுமணன் சஞ்சை கேள்வி எழுப்பினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்