ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள்

 

அருட்திரு ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள் இன்று ஞாயிற்று கிழமை பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது.

பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாளை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி சக்தி இல்ல ஆலயத்தில் ஊர்வலம் இடம்பெற்றதுடன் 84 தீபமேற்றி விசேட பூசை நிகழ்வுகள் ஆலய, சக்தி இல்ல ஆலோசகர் சக்தி விவிதா விஜேய் தலைமையில் இடம்பெற்றது.

முகாமையாளர் சக்தி ஜீவமணியின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்