
-வெல்லாவெளி நிருபர்-
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் கிராமத்தில் மரம் ஒன்று வீதியில் விழுந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக கிராம பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் பிரதான வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA ) அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விழுந்து கிடந்த மரத்தை , வெட்டி அகற்றி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணியளவில் வழமைக்கு திரும்பியுள்ளதாக கிராம பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
