பாக்கு நீரிணையை இன்று நீந்தி கடந்த மாணவன்

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து எட்டாம் தர மாணவன் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

திருகோணமலை இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந் என்ற மணவனே இவ்வாறு பாக்கு நீரினை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் நண்பகல் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

தனுஸ்கோடி முதல் தலை மன்னார் வரையான பகுதியை 9மணித்தியாலம் 37நிமிடம் 54 செக்கனில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள தந்வந்தை பாராட்டி குளோபல் வேல்ட் ரெக்கோர்ட் (Global world Record) ஊடாக சான்றிதழ் மற்றும் பதக்கமும் இலங்கைக்கான இந்திய துணை தூதூவரால் வழங்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்