
திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக போராட்டம்
அம்பாறை கரையோர பகுதியில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொது மக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறைமாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உமிரி தொடக்கம் தம்பட்டை வரையான கரையோரப்பகுதிகளில் இல்மனைட் அழ்வதற்காக நிறுவனம் ஒன்று முயற்சி எடுத்து வருகின்றது. அதற்கு எதிராகவே திருக்கோவில் பிரதேசபொதுமக்களால் இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கபட்டது.
இதன்போது பொதுக்களினால் எம் மண் எமக்கு வேண்டும், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், எம் வளத்தை அழிக்காதை என கோஷங்கள் எழுப்பியவாறு திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து திருக்கோவில் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து அதன் பின்னர் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
குறித்த பேரணியில் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
