
-யாழ் நிருபர்-
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 6இலுப்பை மரக்குற்றிகள் மற்றும் 3வேப்ப மரக் குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடத்தலுக்கு பயன்படுத்திய உழவியந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
