
ரயிலில் மோதி 24 வயது இளைஞன் மரணம்
-பதுளை நிருபர்-
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரவு 7.30 மணியளவில் எல்ல புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி 200 மீற்றர் தொலைவில் உள்ள புகையிரத பாதையில் தலை வைத்து படுத்து இருந்ததாக புகையிரத சாரதி விசாரணையில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன ஆலோசனையின் கீழ் எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
