நடுவீதியில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: 4 பிள்ளைகளின் தந்தை மரணம்

 

கொழும்பு வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடி முற்றத்தில் விழுந்த போது சந்தேக நபர்கள் இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்