
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர்
தம்புள்ளை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய் கிழமை குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேவலவெவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய திருமணமானவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
