மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

நுவரெலியா அக்கரப்பத்தனை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது – 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம் செய்து வந்த குறித்த நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அதிகாலையில் குறித்த காணி பகுதிக்கு ஏன், எதற்காக சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து பார்வையிட்டு மரண விசாரணை செய்த பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்