
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பூநகர்-பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன் (33 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று புதன்கிழமை காலை நண்பர்கள் இருவர் தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதனையடுத்து ஒருவர் மாத்திரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
தன்னால் நண்பரை பாதுகாக்க முடியாத நிலையில் நீந்தி கரைக்கு வந்ததாக தப்பித்து வந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த நபரின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
