
-பதுளை நிருபர்-
பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வயோதிப பெண் பசறை ஆக்கரத்தன்னை பகுதியை சேர்ந்த 82 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது
லுனுகல பிரதேசத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 22 வயதுடைய யுவதியொருவர் செலுத்திய ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் பாதசாரி கடவையை கடந்து சென்ற வயோதிப பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண்ணும் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன தலைமையில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
