தடம் புரண் முச்சக்கர வண்டி

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண் பகல் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்